அஜித்துக்கு ஹிட் அடித்த வாலி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.!!

0

thala ajith walli movie collection: தமிழ் திரையுலகில் அஜித் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படி ஒரு கட்டத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து வந்த அவரை பலரும் விமர்சித்தனர். இருப்பினும் தனது விடா முயற்சியின் மூலம் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அப்படி அந்த தோல்வியில் இருந்து மீட்ட திரைப்படம் தான் வாலி.

இத்திரைப்படத்தில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருடன் இணைந்து பல நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். அந்தவகையில் ஜோதிகா, சிம்ரன், விவேக் போன்ற பலரும் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தை எஸ் ஜே சூர்யா அவர்கள் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் அஜித் அவர்கள் அண்ணன், தம்பி ரோலில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரட்டினார். இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது.

அந்தவகையில் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 11.25 கோடி வசூல் பெற்றது. மேலும் தமிழகத்தையும் தாண்டி மற்ற மாநிலங்களில் சுமார் இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்தது இது அப்போதைய காலகட்டத்தில் மிகப் பெரிய ஒரு சாதனையாக கூறப்பட்டது.இப்படத்தின் மொத்த பட்ஜெட் 3 கோடி என தெரியவருகிறது.

இப்படம் இவ்வளவு பெரிய ஹிட் அடிக்க காரணம் அஜித் என்றே கூறவேண்டும். அந்த அளவிற்கு தனது மௌன தனமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்பட செய்தார். அப்போதைய காலகட்டத்தில் ஒரு படம் 20 கோடிக்கு மேல் வசூலித்தால் பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும் என்பது தெரிய வருகிறது.