ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை எந்த OTT தளத்தில் வெளியாகிறது தெரியுமா.? இதோ அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

0

வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் ரஞ்சித் இவரது இயக்கத்தில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகியுள்ளது அந்த வகையில் பார்த்தால் இவர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

ஆர்யாவின் திரைப்படங்கள் வெளிவந்தால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து விடும் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் ஆர்யாவின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் டெடி இந்த திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் வழியாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படமும் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது என சமீபத்தில் தகவல் வைரலானதை நாம் பார்த்திருப்போம் ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அப்பொழுது வெளிவரவில்லை.

ஆனால் இந்தத் திரைப்படத்தைப் பற்றி தற்போது ஆர்யாவே ஒரு தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அதாவது இந்த திரைப்படம் உறுதியாக அமேசான் பிரேமில் வெளியாக இருக்கிறதாம் இதனை இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை பார்க்க நாங்கள் மிக ஆவலுடன் இருக்கிறோம் என கூறிவருகிறார்கள்.

ஆர்யாவின் திரைப்படங்கள் பற்றி இன்னும் நிறைய தகவல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என கூறுவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் ஆர்யாவும் அவரது மனைவியும் இன்னொரு திரைப்படத்தில் எப்பொழுது சேர்ந்து நடிப்பார்கள் என பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்புகிறார்கள்.