வெள்ளித்திரையில் தனது அயராத உழைப்பின் மூலம் எப்படியோ ஒருவழியாக நானும் ஒரு இசையமைப்பாளர் தான் என ரோஜா திரைப்படத்தின் மூலம் நிரூபித்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இவர் இதனைத் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் இசை அமைத்து தனது இசை ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமீபகாலமாகவே மிகவும் நல்ல நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறார்.
அந்தவகையில் பார்த்தால் இவர் பல திரைப்படங்களில் இசை அமைத்ததற்கு பல விருதுகளை வென்றுள்ளார் மேலும் இவரது இசையில் தற்பொழுது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது ஆம் இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் தான் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
இதுபோக சிம்பு நடித்துவரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கும் இவர்தான் இசை அமைத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதே போல் பல திரைப்படங்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து சமீபகாலமாகவே தமிழ் திரையுலகில் பணியாற்றி வரும் பல நடிகர்கள்,நடிகைகள் மற்றும் பல பிரபலங்களின் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி நிறைய தகவல்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

அதேபோல் தற்பொழுது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஒரு திரைப்படத்திற்கு இசை அமைத்தால் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது.அதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 12 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது இது உண்மையான தகவல் இல்லை என்றாலும் பலரும் இது தான் உண்மை என கூறி வருகிறார்கள்.