சிவகார்த்திகேயன் முதன் முதலில் நடித்ததுஅஜித்துடன் தான் எந்த திரைப்படத்தில் தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இவர் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலங்களாக தற்பொழுது அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.வலிமை திரைப்படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தல அஜித்துடன் எச்.வினோத் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை இரண்டு திரைப்படங்களையும் இயக்கி வருவதைத் தொடர்ந்து தற்போது தல 61 திரைப்படத்தையும் இவர் தான் இயக்க உள்ளார்.

இந்நிலையில் தல அஜித்திற்கு இன்று பிறந்தநாள் என்பதால் பலர் இவருக்கு வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தல அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அந்தவகையில் அஜீத்துடன் சிவகார்த்திகேயன் முதன் முதலாக நடித்த திரைப்படம் ஏகன். இத்திரைப்படத்தின் முதல் காட்சியை பதிவு செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் டாக்டர் திரைப்படம் ரிலீசாக உள்ளது.  இந்த மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் ஓடிடி வழியாக வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.