கேஜிஎஃப் திரைப்படத்தில் சிறுவயதில் ராக்கிபாயாக நடித்த அந்த சிறுவன் தற்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

0

கன்னட திரையுலகின் மூலம் அறிமுகமாகி தமிழில் அதிகப்படியான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் யாஷ் இவர் கேஜிஎஃப் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் நாட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகவும் அற்புதமாக நல்ல விமர்சனத்தைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டது இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது இந்த இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.

மேலும் இதில் யாஷ் நடித்த கதாபாத்திரம் வேற எந்த நடிகர் நடித்து இருந்தாலும் கண்டிப்பாக பொருந்தி இருக்காது அவ்வளவு அற்புதமாக இந்த திரைப்படத்தில் யாஷ் நடித்திருந்தார் அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் யாஷ் சிறுவயதில் காவல்துறை அதிகாரியை மண்டையில் பாட்டிலால் அடித்துவிட்டு பேசும் வசனம் தற்போது வரை ரசிகர்களால் மறக்க முடியாது அந்த சிறுவனின் நடிப்பு ரசிகர்களால் தற்போது வரை பாராட்டப்பட்டு வருகிறது.

kgf
kgf

இந்நிலையில் அந்த சிறுவனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் சிறு வயதில் ராக்கி பாயாக நடித்த அந்த சிறுவன் தற்பொழுது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் ராக்கி பாயாக சின்ன வயதில் நடித்த சிறுவனா இது என பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.