குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை எவ்வளவு சம்பளம் பெற்றார் தெரியுமா.?

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புதுப்புது நிகழ்ச்சி புதுப்புது சீரியல்கள் என ஒலிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அப்படித்தான் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்படும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளிநிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறார்கள் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள் இந்த நிலையில் திடீரென vj மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறார் அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறுகிறார்கள் அதிலும் ஒரு சிலர் மணிமேகலைக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் பலத்த பிரச்சனை ஏற்பட்டது அதனால்தான் மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார் எனவும் கூறுகிறார்கள் ஆனால் இதில் எது உண்மை என்று இதுவரை சரியாக தெரியவில்லை அவரே எதற்காக வெளியேறினார் என்பதை கூறினால் மட்டுமே உண்மையான விவரம் தெரிய வரும்.

இந்த நிலையில் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இறுந்தபொழுது எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி வைரல் ஆகி வருகிறது நிகழ்ச்சியில் பங்கேற்ற மணிமேகலை சம்பளமாக ஒவ்வொரு எபிசோடுக்கும் 60 ஆயிரம் வரை வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

vj அஞ்சனா குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் அந்த வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம், சம்சாரம் அது மின்சாரம், எங்க வீட்டு பாஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இவர் முதன் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தான் விஜேவாக தனது சினிமா கேரியரை தொடங்கினார் அதனைத் தொடர்ந்து சன் டிவி, சன் நியூஸ், ஸ்டார் விஜய் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என பல தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர்.

Leave a Comment