அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் விஜய்க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.? சொன்னா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க.!

விஜய் நடிப்பில் தற்பொழுது லியோ திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இவரது நடிப்பில் எந்த திரைப்படம் வெளியானாலும் அந்த திரைப்படத்திற்கு கட்டாயமாக நல்ல வசூல் கிடைப்பது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனமும் கிடைத்துவிடும் அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மெர்சல்.

இந்த திரைப்படம் வெளிவந்த முதல் நாளிலேயே ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் என்று தான் கூற வேண்டும் மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து நித்தியா மேனன்,சமந்தா,காஜல் அகர்வால் மற்றும் வடிவேல் போன்ற ஒரு சில முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்ததால் படம் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்ததாம். தற்பொழுது இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதன்படி பார்த்தால் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் ரூ.25 கோடி தான் சம்பளமாக வாங்கினார் என இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த மெர்சல்  திரைப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் மிகவும் அற்புதமாக இருக்கும்.

vijay
vijay

அது போல் தற்பொழுது இவர் நடித்துவரும் லியோ திரைப்படமும் நல்ல வசூல் பெற வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என கூறி வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் விஜய் நடிக்கும் இந்த லியோ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment