சர்கார் படத்தில் விஜய்க்கு இவ்வளவு தான் சம்பளமா.? ஆனா இப்ப..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் லியோ வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ள விஜய் தற்பொழுது லியோ படப்பிடிப்பில் நடித்து வருகிறார் மேலும் இந்த படப்பிடிப்பு வீடியோ சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி  வந்ததை நாம் பார்த்திருப்போம்.

நடிகர் விஜயின் திரைப்பயணத்தில் அவருக்கு நிறைய திரைப்படங்கள் கை கொடுத்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் கை கொடுக்கவில்லை அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் சர்கார்.இந்தத் திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  கிடைத்தது ஆனால் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்று படம் அதிகமாக வசூல் செய்யவில்லை.

ஆம் அரசியலை மையமாக வைத்து எடுத்த இந்த திரைப்படம் பல பிரச்சனைகளையும் சந்தித்தது மேலும் தற்பொழுது இந்த திரைப்படத்தில் விஜய் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

படம் என்னமோ சரியாக ஓடவில்லை என்றாலும் நடிகர் விஜய் இந்த திரைப்படத்திற்கு ரூ.35 கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம் குறிப்பாக இந்த திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு விஜய் வருத்தப்படாமல் தனது அடுத்த திரைப்படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் வகையிலான திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துவிட்டார்.

vijay
vijay

இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என்பது பற்றி தெரியவில்லை ஆனால் இந்த திரைப்படம் படும் பயங்கரமாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.

Leave a Comment