காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தை இயக்க விக்னேஷ் சிவன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த திறமையை வெளி காட்டிய விக்னேஷ் சிவன் அதன்பிறகு தமிழ் திரை உலகில் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.

பின்னர் தன்னுடைய ஆசை காதலி நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்து இருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது ஒரு காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் இதில் காதல் காட்சிகளும் ஏராளமாக அமைந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நயன்தாராவின் நடிப்பு பெருமளவு பாராட்டப்பட்டது மட்டுமில்லாமல் விஜய் சேதுபதியும் தன்னுடைய பிரம்மாண்ட நடிப்பு திறனை வெளிக்காட்டி இருப்பார்.

பின்னர் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தை இயக்கிய மாபெரும் தோல்வியை சந்தித்த நமது இயக்குனர் எப்படியாவது வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என பல வருடங்களாக ஒரு கதையை தேர்வு செய்து வைத்திருந்தார்.

அந்த வகையில் சரியான நேரத்தை பார்த்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா சமந்தா என ஆகிய மூவரையும் வைத்து காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் மாபெரும் வெற்றி கண்டது

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் சுமார் இரண்டு கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவலும் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

vignesh-shivan-2
vignesh-shivan-2

Leave a Comment