வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் எந்தெந்த இடத்தில் எவ்வளவு வசூல் செய்து உள்ளது தெரியுமா.? வெளியான புதிய அப்டேட்…

கடந்த ஜனவரி 11ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே தினத்தில் மோதிக்கொண்டது. இந்த இரண்டு படங்களும் வெளிவருவதற்கு முன்பு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியான இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் எச் வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 100 கோடியை தொட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் அவர்கள் கடந்த மூன்று நாட்களாக நூறு கோடி வசூல்லை தொட முடியாமல் இருந்தது.

இந்த நிலையில் விஜயின் வாரிசு திரைப்படம் தற்போது நூறு கோடி வரை வசூலித்துள்ளதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கடந்த மூன்று நாட்களாக வாரிசு படம் தெலுங்கில் வெளியாகவில்லை அப்படி தெலுங்கில் வாரிசு படம் வெளியாகி இருந்தால் அஜித்தின் துணிவை விட அதிக வசூல் வாரி இருக்கும் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு ஆகிய படங்கள் எந்தெந்த இடத்தில் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்று தற்போது ஒரு விவரம் வந்துள்ளது. அதை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

அஜித்தின் துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் முடிவடைந்த நிலையில் 55 கோடி வரை வசூலித்து உள்ளது. மேலும் வாரிசு 53 கோடி வரை வசூலித்துள்ளது இதனால் தமிழகத்தில் விஜயின் வாரிசு திரைப்படத்தை விட துணிவு திரைப்படம் இரண்டு கோடி அதிகமாக வசூலித்து இருக்கிறது.

மேலும் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் வாரிசு திரைப்படம் 5 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. ஆனால் துணிவு திரைப்படம் 3.5 கோடி மட்டுமே வசூல் செய்து உள்ளது. கேரளாவில் 7 கோடி வாரிசு வசூல் செய்து உள்ளது மேலும் துணிவு 2.75 கோடி வசூலித்துள்ளது. கர்நாடகாவில் வாரிசு படம் ஒன்பது கோடி வரை வசூலில் உள்ளது துணிவு திரைப்படம் எட்டு கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது.

அதனைத் தொடர்ந்து வடமாநிலத்தில் வாரிசு திரைப்படம் 2.5 கோடி வசூலித்துள்ளது துணிவு திரைப்படம் 1.5 கோடி வசூலித்துள்ளது மேலும் வெளிநாடுகளில் வாரிசு படம் 45 கோடி வசூலித்துள்ளது துணிவு திரைப்படம் 35 கோடி வசூலித்து உள்ளது. இந்த நிலையில் மொத்தம் துணிவு திரைப்படம் 105.75 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வாரிசு திரைப்படத்தின் மொத்த வசூல் 121. 5 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது இதனால் துணிவை விட வாரிசு படம் அதிக வசூல் செய்து முதலிடத்தில் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

Leave a Comment