“வீட்ல விசேஷம்” படம் – 3 வார முடிவில் அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? சந்தோஷத்தில் படக்குழு.!

ஆர் ஜே வாக தனது பயணத்தை தொடங்கி பின்பு சினிமாவில் முதலில் ஒரு சில படங்களில் முக்கிய காமெடியனாக நடித்து பிரபலம் அடைந்தவர் ஆர் ஜே பாலாஜி. ஒருகட்டத்தில் சினிமாவில் காமெடியாக நடிப்பதை தவிர்த்து ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

அந்த படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது இருந்தும் பின்பு இயக்குனர் அவதாரம் எடுத்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து தற்போது ஆர் ஜே பாலாஜி வீட்ல விசேஷம் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்தில் அவருடன் இணைந்து சத்யராஜ், ஊர்வசி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தனர். அதனால் படம் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேலும் படம் வெளிவந்து தொடர்ந்து நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்ற நிலையில் தற்போது வரை வீட்டில் விசேஷம் திரைப்படம் வெளியாகி மூன்று வாரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த படம் மூன்று வார முடிவில் தமிழகத்தில் மட்டும் 11 கோடி வசூலை அள்ளி உள்ளது. இந்த வசூல் இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது இதனால் ஆர்.ஜே பாலாஜி மற்றும் வீட்ல விசேஷம் பட குழு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றன.

Leave a Comment