“வலிமை” திரைப்படம் வெளிநாடுகளில் இதுவரை அள்ளியுள்ள வசூல் தொகை எவ்வளவு தெரியுமா.? விலாவாரியாக பார்க்கலாம் வாங்க..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பிரபலங்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தையாவது கொடுத்து தனது ரசிகர்களை சந்தோசப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் ரஜினி, விஜய்யை தொடர்ந்து அஜித்த்தும் சிறப்பாக செய்து வருகிறார் இருப்பினும் ஒரு சில தடைகள் காரணமாக அஜித்தின் வலிமை திரைப்படம்.

மட்டும் மூன்று வருடங்கள் கழித்து பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகி  நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் ஆக்ஷன், செண்டிமெண்ட் சீன்கள் நன்றாக இருப்பதால் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் திரையரங்கை நாடிக் கொண்டே போகின்றனர் இதனால் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

வசூல் அதிகமாக அதிகமாக அஜித்தின் வலிமை திரைப்படம் பல்வேறு டாப் நடிகர்களின் வசூல் சாதனையை முந்தி முதலிடத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. வலிமை திரைப்படம் இதுவரை 200 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் தமிழகத்தைத் தாண்டி மற்ற இடங்களிலும்..

அதிலும் குறிப்பாக இந்தியாவில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வசூலில் பின்னிப் பெடலெடுத்து உள்ளது. இது போதாத குறைக்கு வெளிநாட்டிலும் வலிமை திரைப்படத்தின் வசூல் வேற லெவெலில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிந நாடுகளில் வலிமை திரைப்படம்  எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.

அந்த வகையில் மலேசியாவில்  – 10 கோடி, gulf – 12 கோடி, இலங்கை  – 7 கோடி, சிங்கப்பூர் – 4 கோடி, கன்னடா, யூ எஸ் – 4 கோடி, பிரான்ஸ் – 1.5 கோடி, UK – 1.2 கோடி, AUS – 1.5 கோடி, மற்ற இடங்கள் – 5 கோடி. இதனை வைத்து பார்க்கும் போது வெளிநாடுகளில் மட்டுமே  சுமார் 40 கோடிக்கு மேல் வலிமை படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment