தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் அஜித்குமார். அந்த வகையில் விசுவாசம் நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித் மிரட்டி உள்ள திரைப்படம் வலிமை இந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருந்ததால்..
படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்குகிறது.ஆரம்பத்தில் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் தற்போது பெண்களும் குழந்தைகளும் வலிமை திரைப்படத்தை பார்த்து வருகின்றனர் இதனால் வசூல் மட்டும் குறையாமல் உயர்ந்து வருகிறது. ஒரு பக்கம் தமிழ் சினிமாவில் வசூல் அடித்து நொறுக்குகிறது.
என்றால் மறுபக்கம் தெலுங்கு ஹிந்தி கன்னடம் ஆகிய மொழிகளிலும் வசூல் வேட்டை பின்னி பெடல் எடுக்கின்றன. ஆனால் வெளிநாடுகளில் வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தவில்லை என்றாலும் ஓரளவு வசூல் வந்த வண்ணமே இருக்கிறது இதனால்.
வலிமை படத்தை கைப்பற்றிய திரையரங்குகள் மற்றும் வினியோகஸ்தர்கள் வசூல்மழையால் சந்தோஷத்தில் இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் இதுவரை உலக அளவில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டும் 105 கோடியும், இந்தியாவில் உள்ள மற்ற 17 கோடியும், உலக அளவில் மொத்தமாகவும் சுமார் 43 கோடியும் முதல் வாரத்தில் மட்டும் சுமார் ஒட்டுமொத்தமாக முதல் வார முடிவில் 165 கோடி அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல ஆனால் இச்செய்தியை இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

