90 காலகட்டத்தில் ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையான மீனா – குவித்து வைத்து சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? வியப்பில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு கட்டத்தில் ஹீரோயினாக விஸ்வரூபம் எடுத்த பிறகு நடிகை மீனாவின் திரைப்பயணம் உச்சத்தை எட்டியது. தொடர்ந்து நல்ல கதைகளில் நடித்தால் அந்த படங்கள் ஒவ்வொன்றும்  ஹிட் படங்களில் வரிசையில் இடம் பெற்றன.

மேலும் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்தார் நடிகை மீனா. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்ததால் இவர் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக மாறினார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, அர்ஜுன், அஜித், விஜயகாந்த், சரத்குமார், பார்த்திபன், முரளி  போன்றோருடன் நடித்துள்ளார் நடிகை மீனா.

இப்படி சினிமா உலகில் ஓடிக்கொண்டு இருந்தாலும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கினார். மீனா – வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் நைனிகா வித்யாசாகர் என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது.குடும்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மீனா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை மீனா உடல் எடையை குறைத்து ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகை மீனா தெலுங்கில் ஒரு படம் நடிக்கிறார் மலையாளத்தில் ப்ரோ டாடி என்ற படத்தில் நடிக்கிறார் தமிழில் ரவுடி பேபி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இவரைப் போலவே இவரது மகள் நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி பார்வையில் நடிகை மீனாவிடம் சுமார் 80 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.

Leave a Comment