பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அதிலும் சுஜிதா NO.1.

0

சின்னத்திரை சீரியல்களில் மக்களின் வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சில முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் அண்ணன் தம்பி பாசம் மற்றும் வீட்டிற்கு வரும் மருமகள் ஒற்றுமை என நல்லவிதமாகவே எடுக்கப்பட்டு வந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்திலுமே வில்லி கதாபாத்திரம் முக்கிய ரோல் வகித்துவரும் ஆனால் அதற்கு சற்று மாறாகவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வில்லி கதாபாத்திரத்திற்கு வேலை இல்லை மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவரும் பிரபலங்கள் பலரும் இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்து பல ரசிகர்கள் கூட்டத்தையே பெற்றுள்ளன.

தற்போது இந்த சீரியலில் மீனாவின் குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதில் ஒரு சின்ன கலவரமாக காதுகுத்த புதிதாக ஒரு பிரபலம் மீனாவின் அண்ணனாக வருகிறார். அவர் யார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலாக இருக்கின்றனர்.  தற்போது இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் ஒருநாள் சம்பளம் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில் முதலிடத்தில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின்  ஒரு நாளைக்கு ரூபாய் 12,000 சம்பாதிக்கிறார். மேலும் இரண்டாவதாக அண்ணி கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமடைந்த நடிகை சுஜிதா இந்த சீரியலுக்காக ஒரு நாளைக்கு ரூ 17,000 பெறுகிறார். மேலும் இதில் ஹேமா கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீனா ஒரு நாளைக்கு ரூ 8000 வாங்குகிறார்.

அடுத்து இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பெறுகிறார்.  இவருக்கு தற்போது திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது என்ற தகவலும் வெளிவந்துள்ளது. மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் ஒரு நாளைக்கு ரூ 10,000 சம்பளம் வாங்குகிறார். அடுத்து இந்தத் தொடரில் கடைக்குட்டி கண்ணனாக நடித்துவரும் சரவணன் இந்த சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு ரூபாய் 6000 பெற்று வருகிறார்.