“வலிமை” திரைப்படம் உலக அளவில் இதுவரை அள்ளியுள்ள வசூல் எவ்வளவு தெரியுமா.? வெளியான ரிப்போர்ட்.

valimai
valimai

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டு இருப்பவர் நடிகர் அஜித்குமார் இருப்பினும் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை அதிகரித்த வண்ணமே இருக்கின்றன அதனால் அஜித்தின் திரைப்படம் வரும் பொழுது திரையரங்குகள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அப்படித்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக பிப்ரவரி 24ஆம் தேதி கோலாகலமாக வெளியான படம் வலிமை. படம் ஆக்ஷன்,  சென்டிமெண்ட், த்ரில்லர் என அனைத்தும் இருப்பதால் தற்போது ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக அஜித் வியக்க வைக்கும் அளவில் ஸ்டன்ட் காட்சிகள் மற்றும் செண்டிமெண்ட் சீன்களில் பின்னி பெடலெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வலிமை திரைப்படம் நல்ல விமர்சனத்தை சுற்றி வருகிறது மேலும் வசூல் வேட்டையும் சிறப்பாக கண்டு வருகிறது அதுவும் குறிப்பாக தமிழில் தாண்டி மற்ற இடங்களான கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய வற்றிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டுமே முதல் நாளில் மட்டும் 36.17 கோடி வசூலித்த நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் உலக அளவில் இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி பார்க்கையில் வலிமை திரைப்படம் இதுவரை 130 + கோடி வரை வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் இதுவரை 85 கோடி வசூல் செய்துள்ளது ஓவர்சீஸில் 30 கோடி, இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களில் 15 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.