“பிரின்ஸ்” திரைப்படம் உலகம் முழுவதும் – முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தேர்ந்தெடுக்க நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் காமெடி கலந்த படங்களாக இருப்பதால் ரசிகர்களும் தாண்டி குடும்ப ஆடியன்சையும்  வெகுவாக கவர்ந்து விடுகின்றன. அதன் காரணமாக இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறுகின்றன.

ஏன் இவர் கடைசியாக நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கையில் மாவீரன், பிரின்ஸ், அயாலன் போன்ற படங்கள் இருக்கின்றன அதில் முதலாவதாக பிரின்ஸ் படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து மரியா, சத்தியராஜ், பிரேம்ஜி கங்கை அமரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து இருந்தனர். படம் காதல், காமெடி என அனைத்தும் இருந்தாலும்.. படம் கலவையான விமர்சனத்தை பெற்று தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம்..

வெளியாகி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது அதன் படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 6 கோடிக்கு மேலும் உலகம் முழுவதும் 12 கோடிக்கு மேலும் வசூல் செய்திருக்கும் என தகவல்கள் வெளி வருகின்றன வருகின்ற நாட்களில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் இந்த படத்திற்கு எதிர்ப்பாக நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் வேட்டையாடி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் தீபாவளி ரேசில் யார் ஜெயிப்பார் என்பது போகின்ற நாட்களில் தான் தெரியும்..

Leave a Comment