குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.?

விஜய் டிவி என்றாலே பொதுவாக ரசிகர்கள் விரும்பும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்கள் காமெடி நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் காமெடி என்ற ஒன்றை மையமாக வைத்து ஒளிபரப்புவதால் ரசிகர்களும் அந்த நிகழ்ச்சிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியிலேயே இதுவரையும் இல்லாத அளவிற்கு உலகம் முழுவதும்  அமோக வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட்டடித்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சி முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது.

அந்த வகையில் முதல் சீசனை விடவும் இரண்டாவது சீசன் தான் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதற்கு முக்கிய காரணம் இது சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டம் என காமெடியை மையமாக வைத்தும் ஒளிபரப்பியதால் சூப்பர் ஹிட் அடித்தது.

அதோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள்,கோமாளிகள், நடுவர்கள் என்று அனைவரும் பிரபலமடைந்து உள்ளார்கள். அந்த வகையில் இதன் மூலம் பிரபலமடைந்த பலருக்கும் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா – ரூபாய்  10,000

பவித்ரா லட்சுமி – ரூபாய் 10,000

புகழ்- ரூபாய் 15,000

பாலா – ரூபாய் 15,000

மணிமேகலை – ரூபாய் 20,000

சிவாங்கி – ரூபாய் 20,000

அஸ்வின் – ரூபாய் 20,000

பாபா மாஸ்டர் – ரூபாய் 40,000

மதுரை முத்து – ரூபாய் 40,000

ஷகிலா – ரூபாய் 50,000

கனி இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பதால் இவரின் சம்பளத்தை பற்றிய சரியான தகவல் தெரியவில்லை.

Leave a Comment