வலிமை : நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் வசூல் – மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் எவ்வளவு அள்ளியுள்ளது தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்கள் படங்களில் வெளிவரும்போது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவது வழக்கம் அதே சமயம் இரண்டு, மூன்று நாட்கள் திரையரங்கை முற்றுகையிட்டு ரசிகர்கள் படத்தைப் பார்த்து அசத்துவார்கள் அப்படித்தான் அஜித்தின் திரைப்படத்தையும் கொண்டாடி வருகின்றனர். கடைசியாக நேர்கொண்ட பார்வை, விசுவாசம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு வழியாக பிப்ரவரி 24ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் வலிமை.

இப்படம் ஆக்சன் திரைப் படமாக இருக்கும் என ட்ரெய்லரிலேயே அறிந்து கொண்டதால் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர். படம் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து உள்ளதால் படம் நல்ல விமர்சனத்தையும்,  வசூலையும் அள்ளி வருகிறது. தமிழகத்தில் மட்டும் முதல் நாள் மட்டுமே சுமார் 36 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து படம் திரைப்படம் அடுத்தடுத்த நாளும் நல்ல ஆலோசனைகளை அள்ளி வருகிறது. தமிழை தாண்டி மற்ற மொழிகளான கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வசூல் குவிந்து வருவதால் வலிமை திரைப்படம்  மூன்று நாட்களில் மட்டும் 100 கோடியை தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

வெறும் மூன்று நாட்களில் மட்டுமே 100 கோடியை தொட்டது மிகப்பெரிய ஒரே ஆச்சரியத்தை கொடுத்து உள்ளது மேலும் ரஜினி, விஜய் போன்ற டாப் நடிகர் படங்களின் வசூலையும் பீட் பண்ணி உள்ளது. இந்த நிலையில் வலிமை திரைப்படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் மட்டும் ஒரு கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் அடுத்தடுத்த நாள்களில் வசூல் குறையும் என கணிக்கப்பட்டது.

காரணம் கலவையான விமர்சனங்களை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் திரையரங்கை நாடிக் கொண்டே போக்குவதால் வசூல் உயர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில் சென்னை ஏரியாவில் மட்டும் 3 வது நாளில் கூட  1. 36 கோடி. சென்னை எரியாவில் மட்டும் 3  நாட்களில் மொத்தமாக 4.24 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment