இது எப்படி இருக்கு.! 16 வயதினிலே படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர் தான் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துள்ளது ஆகையால் இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு சம்பளம் கோடிக்கணக்கில் தான் இருக்கிறது.

மேலும் இவரது தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் ஒரு திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளம் பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.16 வயதினிலே என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வில்லனாக நடித்திருப்பார் அதைவிட இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனும் நடித்திருப்பார்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அப்பொழுதே தந்தார்கள் மேலும் இந்த திரைப்படத்திற்காக ரஜினி கேட்ட சம்பளம் ரூபாய் 3000 தான் ஆனால் படத்தில் நடித்து முடித்துவிட்டு ரஜினிக்கு 2500 தான் சம்பளமாக கொடுக்கப்பட்டது எனவும் இந்த தகவல் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் மக்களால் மறக்க முடியாத விஷயம் என்றால் ரஜினி அடிக்கடி இது எப்படி இருக்கு என்ற வசனத்தை பேசிக்கொண்டே இருப்பார் அதற்கு ஏற்றது போல தான் தற்பொழுது உள்ள ரசிகர்கள் பலரும் ரீல்ஸ்கள்,வீடியோக்கள் போன்றவையை டப்பிங் செய்து பதிவு செய்து வருகிறார்கள்.

kamal
kamal

இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த திரைப்படம் எப்பொழுது தொடங்க இருக்கிறது எனவும் அவர் அடுத்த திரைப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதும் தெரிந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் ரஜினியின் அடுத்த படத்தை பற்றி அப்டேட் கூறுங்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment