கோடிகளை குவிக்கும் சமந்தாவின் “யசோதா” – 2 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

0
samantha-
samantha-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.. இவர் அன்மை காலமாக சினிமா உலகில் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அதனால் அவரது மார்க்கெட்டும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

இப்பொழுது கூட இவர் நடிப்பில் யசோதா திரைப்படம் உருவாகி சில தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது படம் பெரிய அளவில் எதிர்பார்க்கபட்டது அதை பூர்த்தி செய்யும் வகையில் படமும் சூப்பராக இருந்தது.. இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு படமாக யசோதா இருந்தது.

இந்த படம் எதை குறிப்பிட்டு சொல்லுகிறது என்றால் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது ஏற்படும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறது. யசோதா திரைப்படத்தில் சமந்தாவுடன் கைகோர்த்து வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், சம்பத்ராஜ் முரளி, பிரியங்கா, ஷர்மா shatru, kalpika ganesh மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

படம் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்று ஐந்து மொழிகளிலும் சூப்பராக ஓடுவதால் இந்த படத்திற்கான வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது இந்த படத்தின் முதல் நாள் வசூல் 4 கோடிக்கு மேல் அள்ளிய நிலையில் இரண்டாவது நாளிலும் நல்ல வசூல்.. ஆம் 5 கோடி வரை வசூலித்திருக்கிறதாம் ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் மட்டுமே யசோதா திரைப்படம்.

10 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவை தாண்டி அமெரிக்கா மலேசியாவிலும் இந்த படத்திற்கான வரவேற்பு நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது இதனால் யசோதா திரைப்படம் வருகின்ற நாட்களிலும் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பட குழுவும் சரி நடிகை சமந்தாவும் சரி செம உற்சாகத்தில் இருக்கின்றனராம்.