தற்போதைய நிலவரப்படி.. அஜித், விஜய், ரஜினி, கமல் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுக்கின்றனர் அந்த படம் மாபெரும் வெற்றி படமாக மாறும் பட்சத்தில் நடிகர்கள் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்துகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றவர்கள்..

ஒரு படத்தை ஹிட் கொடுத்த உடன் தனது சம்பளத்தை மாற்றுகின்றனர். தற்பொழுது ஒவ்வொரு நடிகரும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 62வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது சொல்லப்படவில்லை..

மறுபக்கம் தளபதி விஜய் கடைசியாக நடித்த வாரிசு படம் வசூல் ரீதியாக வெற்றியை கண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தளபதி 67 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இவர்களுக்கு இணையாக நடிகர் ரஜினியும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் நெல்சன் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாக்கி வருகிறது.கமல் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2 இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பிஸியாக நடைபெற்று வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த நான்கு நடிகர்களும் தற்போது எவ்வளவு சம்பளம்  வாங்குகிறார்கள் என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது. நடிகர் அஜித்குமார் – 90 கோடி, விஜய் – 80 கோடி, ரஜினிகாந்த் – 75 கோடி, கமலஹாசன் – 60 கோடி, தனுஷ் – 50 கோடி என சொல்லப்படுகிறது.

Leave a Comment