பிக்பாஸ் வீட்டில் விளையாண்டதற்கு அபிஷேக் ராஜா இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியான ஷாக்கிங் தகவல்.

abhisek-raja
abhisek-raja

விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இவை தற்போது பிக்பாஸ் சீசன் 5 கோலாகலமாக  தொடங்கி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது மூன்று வாரங்களை கடந்து நான்காவது வாரம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 3 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

அதிலும் குறிப்பாக நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அபிஷேக் வெளியேறினார். இவர்  பிக்பாஸ் வீட்டில் அவருக்கு தோன்றும் வகையில் தந்திரமாக விளையாடி வந்தார் மற்றும் அபிஷேக் இதுவரை பிக்பாஸ் வீட்டில் ஜாலியாக கண்டண்ட் கொடுத்து சுவாரசியமாகவும் விளையாடி வந்தார். இவர் வந்த முதல் வாரத்தில் அனைத்து போட்டியாளர்கள் இடமும் சமமாக பேசிவந்தார்.

பின்பு இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் பிரியங்கா மற்றும் நிரூப் உடன் கூட்டணி அமைத்து மூவரும் குழுவாகவே செயல்பட்டு வந்தனர். அபிஷேக் மற்ற அனைவரிடமும் வம்பு இழுத்துக் கொண்டே இருப்பார். இவர் இந்த பிக்பாஸ் வீட்டில் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் சண்டைகளில் ஈடுபடுவார்.

ஆனால் இவரது கேம் பிளான் அனைத்தும் மக்களுக்கு பிடிக்காமல் போனதால் மக்களின் ஓட்டை அவரால் பெரிதும் கவர முடியவில்லை.  நேற்று மக்களின் தீர்ப்பின்படி சின்னப்பொண்ணு மற்றும் அபிஷேக் இருவரும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளனர். அதில் குறைவான வாக்குகளைப் பெற்று அபிஷேக் வெளியேறினார்.

ஆனால் இவரது எலிமினேஷன் மற்ற போட்டியாளர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை மற்றும் மிகவும் வருத்தம் அடைந்தனர். பிக் பாஸ் வீட்டில் இவரின் ஒரு வார சம்பளம் மட்டும் ரூபாய் 1.75 லட்சம். ஆக மூன்று வாரங்கள் இவர் இந்த வீட்டில் விளையாடியதற்கு ரூபாய் 5.25 லட்சதோடு வீட்டை விட்டு வெளியேறினார்.