கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் மூன்று முடிச்சு படத்தில் நடித்ததற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.? இதோ முழு விவரம்..

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்களில் ஒருவர் தான் ரஜினிகாந்த் இவர் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வெளிவந்து மக்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும்.மேலும் இவர் தற்பொழுது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெறவில்லை அதனால் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரஜினிகாந்த் அற்புதமாக இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறாராம்.

அதனைத்தொடர்ந்து பார்த்தால் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது மேலும் இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்றுதான் மூன்று முடிச்சு இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

kamal
kamal

அதன்படி இன்று ரூ.100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் மூன்று முடிச்சு திரைப்படத்தில் நடிப்பதற்காக வெறும் ரூ.2000 தான் சம்பளம் வாங்கினாராம் இவருடன் இணைந்து நடித்த கமல்ஹாசன் ரூ.30000 சம்பளம் வாங்கியதாகவும் நடிகை ஸ்ரீதேவி ரூ.5000 வாங்கியுள்ளதாகவும் இந்த தகவலை நடிகை ஸ்ரீதேவி பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டியில் கூறியதாக இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வரலாகி வருகிறது.

Leave a Comment