காமெடி நடிகர் “தாடி பாலாஜி” சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? வியப்பில் ரசிகர்கள்.

தமிழ் சினிமா உலகில் காமெடி என்றால் நாம் நினைவுக்கு வருபவர்கள் விரல்விட்டு அளவிற்கு தான் இருக்கின்றனர் அதிலும் குறிப்பாக கவுண்டமணி செந்தில் வடிவேலு பெயர் முதலில் வந்து விடும் அந்த அளவிற்கு அவர்கள் சினிமா உலகில் நடித்து உள்ளார்கள் ஆனால் இவர்களுக்கு பின்னால் பல சின்ன காமெடி நடிகர், நடிகைகள் இருக்கின்றனர்.

அந்த லிஸ்டில் இருப்பவர் தான் தாடி பாலாஜி இவர் 90 கால கட்டங்களில் இருந்து சினிமா உலகில் காமெடியனாக நடித்த ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் 1997 ஆம் ஆண்டு நந்தினி என்ற படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தீனா, ஷாஜகான், சச்சின், சுறா, லிங்கா, மாஸ்டர் லோக்கல் என பல்வேறு படங்களில் காமெடியனாக தலைகாட்டி அசத்தி உள்ளார்.

சினிமா உலகில் இப்படி ஓடினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் சின்ன திரையிலும் தொகுப்பாளராகவும், காமெடியனாகவும் தலைகாட்டி அசத்தியுள்ளார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் 2009 ஆம் ஆண்டு நித்யா என்பவரை  காதலித்து திருமணம் செய்து கொண்டார் இருவருக்கும் போஷிகா  என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.

தாடி பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். தாடி பாலாஜி தற்பொழுது தனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்  தற்போது தாடி பாலாஜி சின்னத்திரை பக்கம் அதிகம் கவனம் செலுத்தி ஓடிக்கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் தாடி பாலாஜி சேர்த்து வைத்திருக்கும்  சொத்து மதிப்பு குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் அவரின் சொத்து மதிப்பு சுமார் மூன்று முதல் நான்கு கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை வட்டாரங்கள் மத்தியில் பெரிய அளவு பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment

Exit mobile version