“வெந்து தணிந்தது காடு” படத்தால் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா.? வெளியே கசிந்த தகவல்..

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் காதல் ஆக்சன் போன்ற படங்களை எடுப்பதில் ரொம்பவும் கை தேர்ந்தவர் இவர் இதுவரை எடுத்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் குறிப்பாக சிம்புவும் இவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்துமே ஹிட்டுதான். அந்த வகையில் அண்மையில் கௌதம் வாசுதேவ் மேனனும் சிம்புவும் இணைந்து பணியாற்றிய திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.

இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார் இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து siddhi idnani, Neeraj madhav, kayadu lohar மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கிராமத்து பையன் மும்பை பக்கம் போய் எப்படி மிகப்பெரிய டானாக மாறுகிறார் என்பது படத்தின் கதை இந்த படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சூப்பராக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது படம் ஆரம்பத்திலேயே நல்ல வசூல் வேட்டை நடத்தியதால் படக்குழு வெற்றியை கொண்டாடியது.

மேலும் படத்தின் தயாரிப்பாளர் சிம்புவுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கையும் பரிசாக கொடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உண்மையில் வெந்து தணிந்தது காடு படம் எவ்வளவு லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்று கொடுத்தது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 10 கோடி ரூபாய் ஷேர் கொடுத்துள்ளது என்றும் சொல்லப்படும் நிலையில் தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் ஆகியவை நல்ல தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது இதன் காரணமாக தயாரிப்பாளருக்கு 19 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது என கூறப்படுகிறது.

Leave a Comment