பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக பல சினிமா பிரபலங்கள் எப்படியாவது பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுத்து விட வேண்டும் என்று முயற்சித்து பார்த்து கைவிட்ட பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தங்களது திறமையின் மூலம் தற்பொழுது முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாக எடுத்துவிட்டார்.

நேற்று வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தையும் பெற்று வந்தது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களுமே படம் வெளியாகுவதற்கு முன்பு பல நகரங்களுக்கு சென்று புரோமோஷன்களில் கலந்து கொண்டார்கள் அப்பொழுது அவர்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருக்கலாம்.

நேற்று வெளியான இந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு நல்ல விமர்சனங்களை தொடர்ந்து தற்பொழுது முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதன்படி பார்த்தால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் சுமார் ரூ.2௦ கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

மேலும் இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் தற்பொழுது இணையத்தில் இவ்வளவுதான் முதல் நாள் வசூல் என இந்த தகவல் மிக வேகமாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஒரு சில ரசிகர்கள் இதனை பார்த்துவிட்டு இது சும்மா ஓப்பனிங் தான் இனிமேதான் இருக்கு என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

ps2
ps2

தொடர்ச்சியாக பல கோடி வரை வசூல் செய்ய நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் பல பிரபலங்களும் கூறிவரும் நிலையில் தற்பொழுது படம் கொஞ்சம் மெதுவாக சென்றாலும் எந்த ஒரு காட்சியிலும் ரசிகர்கள் முகம் சுளிக்குவது  போல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment