ICC வெளியிட்ட டெஸ்ட் தர வரிசையில் ஹிட்மேன்னுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா.? டெஸ்ட் கிரிக்கெட்டில் நிடிப்பரா.?

கிரிக்கெட் உலகில் பல்வேறு விதமான சாதனைகளை புரிந்து வருபவர் ரோகித் சர்மா. இன்னும் குறைந்த ஓவர் பார்மட்டில் அதிரடியை காட்டக்கூடிய தில் இவருக்கு ஈடு இணை எவருமில்லை ஆரம்பத்தில் சில பந்துகளை நிதானமாக கையாண்டாலும் அதன்பின் இவர் விளையாடுகிற ஒவ்வொரு ஷாட்டுக்கும் மரண அடியாக தான் இருக்கும்.

மேலும் அவரது விக்கெட்டை வீழ்த்துவது கடினம் அந்த அளவிற்கு நிலைத்து நின்று விடுவார் இதனாலேயே அவரை பலரும் ஹிட் மேன் செல்லமாக  அழைக்கின்றனர்.  குறைந்த ஓவர் பார்மட்டில் வெற்றிகண்ட ரோகித் சர்மா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் காலூன்றி தொடக்க ஆட்டக்காரராக ஆடி வருகிறார். அதிலேயும் தற்போது வெற்றி கண்டு உள்ளார். அந்த வகையில் ICC டெஸ்ட் தர வரிசையில் முன்னோக்கி பயணிக்கிறார்.

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரிசையில் ரோகித் சர்மா தற்போது 8-வது இடத்தைப் பிடித்துள்ளார் இவரைத் தொடர்ந்து பண்ட் சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடி தற்போது தரவரிசைப் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார் இவரை தொடர்ந்து விராட் கோலி 5 வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் இந்த மூன்று நபர்கள் இருக்கும் வரை எந்த ஒரு அணிக்கும் அவ்வளவு எளிதில் ஜெயித்துவிட முடியாது இவர்கள் மூவருமே நிலைத்து நின்று விட்டால் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வல்லமை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஹிட்மேன் அதிரடியை காட்டக் தொடங்கி விட்டால் அது டெஸ்ட், T20, ஒரு நாள் போட்டி எனபார்க்க மாட்டார் களத்தில அனல் பறக்கும்.

இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது முன்னேறி சென்றுள்ளதால் பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என கூறியும் வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version