“விக்ரம் திரைப்படம்” வசூல் மற்றும் வியாபாரத்தின் மூலம் அள்ளிய மொத்த தொகை எவ்வளவு தெரியுமா.? வியப்பில் தமிழ் சினிமா.!

உலக நாயகன் கமலஹாசன் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க்கும் வகையில் எப்போதும் வித்தியாசமான கதை காலத்தை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம்.அந்த வகையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையை சற்று வித்தியாசமாக இருந்ததால் அந்த திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்தார்.

மேலும் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தான் விக்ரம் படத்தை பிரமாண்ட பொருள் செலவில் தயாரித்தது. விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், காயத்ரி, ஏஜென்ட் டினா மற்றும் பல பிரபலங்கள் கொடுத்த கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தனர்.

படம் ஒரு வழியாக ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் வெளிவந்து வரவேற்பை பெற்று சூப்பராக  ஓடியது.  குறிப்பாக விக்ரம் திரைப்படம்  தமிழ் நாட்டையும் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நன்றாக ஓடியது. அதன் காரணமாக நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

120 அல்லது 150 கோடி பட்ஜெட்டில் உருவான விக்ரம் திரைப்படம் தற்போது வரை சுமார் 420 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. 30 நாட்களைக் கடந்தும் பல்வேறு திரையரங்குகளில் விக்ரம் படம்  இன்னும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

vikram movie
vikram movie

இதனால் இந்த படத்தின் வசூல் இன்னும் நிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் திரைப்படம் தற்போதைய வசூல் நிலவரப்படி 420 கோடி அள்ளி உள்ளது. வியாபாரத்திலும் நல்ல காசு பார்த்தது மொத்தத்தையும் சேர்த்து வைத்து பார்த்தால்  விக்ரம் திரைப்படம் எப்படியும் 500 கோடி வரை காசு பார்த்திருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment