“அண்ணாத்த” திரைப்படம் இதுவரை உலக அளவில் கைப்பற்றிய தொகை எவ்வளவு தெரியுமா.? அசர வைக்கும் சூப்பர் தகவல்.

0
annathaa
annathaa

டாப் நடிகர்களின் படங்கள் என்றாலே ரசிகர்கள்  செமையாக கொண்டாடுபவர்கள். அதிலும் ரஜினி படம் என்றால் சொல்லவே வேண்டாம் துள்ளல் ஆட்டம் போடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் அப்படித்தான் கடந்த தீபாவளியன்று ரஜினியின் அண்ணாத்த திரைப்படம்.

வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி தற்போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தின் பழைய கதையாக இருந்தாலும் ரஜினியின் ஸ்டைல் மற்றும் அவரது சென்டிமென்ட் சீன்கள் சிறப்பாக இருப்பதால் ரசிகர்கள் இந்தப் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். ரஜினியுடன் கைகோர்த்து நயன்தாரா கீர்த்தி சுரேஷ் மீனா குஷ்பூ பிரகாஷ்ராஜ் ஜெகபதிபாபு அபிமன்யு சிங் என பலர் நடித்து அசத்தி உள்ளன.

அண்ணாத்தா படம் முதல் இரண்டு நாட்களில் மட்டுமே எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் வேட்டை நடந்தது ஆம் 2 நாட்களில் மட்டும்  அண்ணாத்த  திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது அடுத்தடுத்த நாட்களிலும் மிகப்பெரிய வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை குறிப்பிட்டுள்ளதால் படத்தின் வசூல் பாதித்து உள்ளது என தெரியவந்துள்ளது.

இதுவரை அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 150 கோடியை நெருங்கி உள்ளதாக தெரியவருகிறது தமிழ்நாட்டில் மட்டும் அண்ணாத்த திரைப்படம் கிட்டத்தட்ட சுமார் 82 கோடியை வசூல் அள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இனி வருகின்ற நாட்களில் மழை இல்லாவிடில் நிச்சயம் அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என தெரியவருகிறது.