கலவை விமர்சனமாக இருந்தாலும் 10-வது நாளில் விருமன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

viruman
viruman

நடிகர் கார்த்திக் மற்றும் இயக்குனர் முத்தையா இவர்களுடைய கூட்டணியில் இரண்டாவது முறையாக விருமன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது மேலும் இவர்களின் கூட்டணியில் இதற்கு முன்பு கொம்பன் திரைப்படம் வெளியாகி இருந்தது இவ்வாறு இவர்கள் கூட்டணியில் வெளியாகி உள்ள இந்த இரண்டு திரைப்படங்களுமே கிராமத்து கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது.

மேலும் விருமன் திரைப்படத்தினை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சங்கர் மகள் அதிதீஷங்கர் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்களை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் விருமன் திரைப்படம் வெளியாகிய இன்று பத்தாவது நாள் என்பதால் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் தாசில்தாராக பிரகாஷ்ராஜுக்கு நான்கு மகன்கள் இருக்கின்றனர் அதில் கடைசி மகன் தான் கார்த்தி கார்த்தியின் தாயாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார் கார்த்தி தன் தந்தையை விட தாய் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சரண்யா பொன்வண்ணன் இறந்து விடுகிறார் தன்னுடைய தாயின் இழப்பை தாங்க முடியாமல் தன்னுடைய தாயின் இறப்பிற்கு பிரகாஷ்ராஜ் தான் காரணமாக இருப்பதால் அவரை கொல்ல வேண்டும் என்ற கோபத்துடன் காத்திருந்து வருகிறார். இதன் காரணமாக குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து பல பிரச்சனைகளுக்கு பிறகு கார்த்தி தனது குடும்பத்துடன் இணைந்து வாழ்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் 475 திரையரங்குகளில் வெளியாகி இருந்தது மேலும் தமிழகத்தில் மட்டும் இந்த படம் 8 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது இவ்வாறு நல்ல வசூலை பெற்றிருக்கும் இந்த திரைப்படம் வெளியாகி தற்பொழுது வரையிலும் உலகம் முழுவதும் 55 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது இனி வரும் நாட்களிலும் இந்த படம் வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.