உலக அளவில் விடுதலை திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? தலையே சுத்துதே..

தனது திரைப்படங்களை ரசிகர்களுக்கு தரமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து இயக்கி வரும் இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் வெற்றிமாறன் இவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் நடிகர் சூரி அவர்களை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி பல சினிமா பிரபலங்களிடம் பாராட்டு மழையில் நனைந்து வந்தார் வெற்றிமாறன்.இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இந்த திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக பவானிஸ்ரீ கதாநாயகியாக நடித்திருப்பார் மேலும் கௌதம் மேனன்,விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

அதனை தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் தான் இசையமைத்து இருந்தார் என்பதும் தெரிந்த விஷயம் அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் கூட இந்த திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் இன்னும் எடுக்கப்பட வேண்டும் அந்த காட்சிகளை மட்டும் எடுத்து விட்டால் உடனே இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விடலாம் எனவும் ரசிகர்களுக்கு தெரிவித்தாராம்.

தற்பொழுது இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.அதாவது விடுதலை திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ 52 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பது மட்டும் தெரிகிறது.

vetri maran
vetri maran

Leave a Comment