இன்று கோடிகளில் புரளும் சூரியா முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.! இதோ அவரே கூறிய தகவல்

நடிகர் சூர்யா தற்பொழுது சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை  இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இசை அமைத்து உள்ளார்.

நடிகர் சூர்யா திரை உலகிற்கு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதிலிருந்து ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர் கடந்த ஆண்டு காப்பான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படம் திரையரங்குகளில் ஓரளவுக்கு வெற்றிகரமாக ஓடி இருந்தது.

ஆனால் சூர்யாவின் ரசிகர்கள் அதிகம் இந்த படத்தை பெரிதாக ஏற்கவில்லை. இதனை அடுத்து நடிகர் சூர்யா சூரரைப்போற்று படத்தை பற்றி இணையதளத்தில் இப்படத்தின் டீசர் டிரைலர் பற்றி பேட்டி அளித்துக் கொண்டே வந்தார். அப்படியான பேட்டியி ஒன்றில் அவர் வாங்கிய முதல் சம்பளத்தை பற்றி கூறியிருந்தார்.

அது என்னவென்றால் இவர் சினிமாவிற்கு நடிப்பதற்கு முன்பு ஆடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாகவும். அப்போது நான் வாங்கிய முதல் சம்பளம் 736 ரூபாய் மட்டுமே என கூறினார். முதல் சம்பளம் வாங்கியது எனக்கு இன்னும் கூட ஞாபகம் இருக்கு என்று பேட்டி அளித்திருந்தார்.

Leave a Comment