கொரோனா மற்றும் பெப்சி உழியர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் எவ்வளவு நிதி உதவி வழங்கினர் தெரியுமா.? புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்.

கொரோனா என்ற ஒற்றைச் சொல் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருப்பது தான் ஒரே வழி என்று பலரும் கூறுகின்றனர் ஏனென்றால் மக்கள் கூட்டம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு தான் இதன் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது அதன் காரணமாகவே அனைத்து தொழில்களையும் முடக்கியுள்ளது மத்திய மாநில அரசுகள்.

இருப்பினும் மக்கள் அத்தியாவசிய பொருள்களுக்காக வெளியே செல்லவேண்டிய சூழல் ஏற்படுவதும் தற்போது இருக்கிறது இருப்பினும் நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டால் மட்டுமே இதில் இருந்து வெற்றி முடியும் என்பதுதான் உண்மை.

அதனை வலியுறுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு வீடியோ மற்றும் ஒலிபெருக்கியின் மூலம் சொல்லிக் கொண்டுதான் வருகிறது இருப்பினும் மக்கள் ஒருபக்கம் இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர் ஆனால் இதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டால் இதிலிருந்து பெரிதும் தப்பித்துவிடலாம் என்று மருத்துவர்களும் விழிப்புணர்வு வீடியோக்களும் வெளியிட்ட வண்ணமே இருக்கின்றன.

தற்போது இருக்கிறார் சுழல் சரி தமிழக அரசு கொரோனா நிதிகாக தன்னால் முடிந்ததை கொடுங்கள் என கேட்டுள்ளது இதனையடுத்து பல தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் தன்னால் முடிந்த அரசு ஊழியர்களும் பணத்தை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் டிவி குழுமம் சுமார் 10 கோடி அதிக அளவில் கொடுத்த நிறுவனமாக தற்போது இருக்கிறது.

அதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் தன்னால் முடிந்த காசோலைகளை கொடுத்துள்ளனர் இப்படியிருக்க தமிழ் சினிமாவில் தற்போது சைலண்டாக இருந்து கொண்டு படங்களை அள்ளிக் குவிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது கொரோனாநிதிக்காக தன்னால் முடிந்த காசோலைகளை கொடுத்துள்ளார்.

அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழக அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி கொடுத்துள்ளார் அதோடு பெப்ஸி உழியர்களுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு லட்சம் கொரோனா நிதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது

Leave a Comment