நடிகர் சூர்யா காக்க காக்க படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.? நினைச்சுப் பார்த்தாலே ஒத்து வரலையே.!

தமிழ் சினிமாவில் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்களில் ஒருவர்தான் சூர்யா இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் தலைப்பு இந்த மாதம் வெளிவர இருப்பதாகவும் தகவல் வெளியானது மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளியாகும் எனவும் தகவல் கசிந்துள்ளது.இதனை தொடர்ந்து சூர்யா வாடிவாசல் மற்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகவும் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களில் ஒன்றுதான் காக்க காக்க இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

மேலும் சூர்யா காக்க காக்க  திரைப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது பற்றி தான் ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதன்படி பார்த்தால் சூர்யாவின் திரை வாழ்க்கையில் இந்த திரைப்படத்திற்காக ரூ.5 லட்சம் மட்டும் தான் சம்பளமாக வாங்கினாராம்.

surya and jothika
surya and jothika

மேலும் இந்த திரைப்படம் வெளியான பொழுது சூர்யாவை பலரும் பாராட்டியது மட்டுமல்லாமல் படம் சூப்பர் ஹிட் அடித்து விட்டது இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவர காத்திருக்கும் ஒரு சில முக்கிய திரைப்படங்களை இவரது ரசிகர்கள்  சமூக வலைதள பக்கங்களில் கேட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.சில ரசிகர்கள் வாடிவாசல் திரைப்படம் விரைவில் வந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment