10 நாட்கள் முடிவடைந்த நிலையில் தனுஷின் கர்ணன் எவ்வளவு வசூல் தெரியுமா.? சென்னையில் மட்டும் இவ்வளவா.!

karnan
karnan

தமிழ் சினிமாவில் முன்னணி  நட்சத்திரமாக கொடிகட்டிப் பறந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் கர்ணன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் கர்ணன் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். மாரி செல்வராஜ்க்கு உதவி இயக்குனராக ராஜ் பணியாற்றி வந்தார். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.

இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் மூலம் மாரி செல்வராஜ்க்கு பல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. அதோடு பல பிரபலங்கள் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து பாராட்டுகளை  கூறி வருகிறார்கள்.

அதோடு தனுஷும் இத்திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் ஹோலிவுட் படமான தி கிரேட் மேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எனவே தனுஷ் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கிருந்து தனது மனைவியுடன் கர்ணன் திரைப்படத்தின் வெற்றிக்கு உதவிய அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி என்ற டுவிட்டை சில தினங்களுக்கு முன்பு  வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கர்ணன் திரைப்படம் கடந்த மாதம் 9ஆம் தேதி வெளியானது.

இத்திரைப்படம் பெரும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து இயக்கப்பட்டதால் இத்திரைப்படத்தின்  விமர்சனம் பெரிதளவில் பேசப்பட்டது.  இந்நிலையில் இதுவரையிலும் இத்திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் முடிவடைந்து விட்டது. அந்த வகையில் சென்னையில் மட்டும் ரூபாய் 3.41 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.