BIGGBOSS : சீசன் 7 போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Biggboss 7 : மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சி விஜய் டிவி. இதில் புது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக நடத்தி வருகிறது. 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 7வது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

வழக்கம் போல உலகநாயகன் கமலஹாசன் ஆரம்பித்தார். மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் புதிய ரூல்ஸ் மற்றும் பிக்பாஸ் வீட்டில் இரண்டு வீடு என டோட்டலாக எல்லாவற்றையும் மாற்றி உள்ளது மேலும் இந்த தடவை திருநங்கைக்கு வேலை இல்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் 7 வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி பார்க்கையில்.. வனிதா மகள் ஜோவிகா 13000, நடிகை அக்ஷயா உதயகுமார் 15000, நடிகை மாய கிருஷ்ணன் 18000, டான்சர் ஐஷு 15000..

நடிகை பூர்ணிமா ரவி 15000, புதுமுகமான அனன்யா ராவ் 12000, பாண்டியன் ஸ்டோர் நடிகர் சரவணன் விக்ரம் 18000, எழுத்தாளர் பாபா செல்லதுரை 28000, பிக்பாஸ் 7 முதல் கேப்டன் விஜய் வர்மா 15000, கூல் சுரேஷ் 18,000, மலேசியா வாசுதேவனின் மகன் யோகேந்திரன் 27 ஆயிரம், பாடகரான நெக்சன் 13,000..

கவின் நண்பன் நடிகர் பிரதீப் ஆண்டனி 20000, நடன கலைஞர் மணிச்சந்திரா 18000, சீரியல் நடிகர் விஷ்ணு 25000, விசித்திரா 27000, நடிகை ரவீனா 18000, சீரியல் நடிகை வினுஷா தேவி 20000 என வழங்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை..

Exit mobile version