வசூலில் ருத்ர தாண்டவம் ஆடிய அவதார் 2.! எத்தனை மில்லியன் டாலர் தெரியுமா.?

தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை தமிழ் படங்களை மட்டும் பார்க்காமல் பலமொழி திரைப்படங்களையும் ரசித்து பார்ப்பார்கள் அந்த வகையில் ஹாலிவுட் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது.  அப்படி வெளியாகும் ஹாலிவுட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் அது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய வசூலை பெரும்.

அந்த வகையில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகிய திரைப்படம் தான் அவதார், இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. அதுமட்டுமில்லாமல் 3டியில் வெளியாகிய இந்த திரைப்படத்தை கண்டு ரசிகர்கள் பிரமித்தார்கள்.

மேலும் அவதார் திரைப்படத்தில் காட்டப்பட்ட பண்டோரா கற்பனை உலகம் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது அந்த அளவு மிகவும் அற்புதமாக இருந்தது. திரைப்படம் வெளியாகி 13 வருடங்களுக்குப் பிறகு தற்போது இரண்டாவது பாகம் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்திற்கு  தி வே ஆப் வாட்டர்  என பெயரிட்டுள்ளார்கள்.

அவதார் இரண்டாவது பாகம் ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என கிட்டத்தட்ட 160 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில் வெளியாகி உள்ளது கடந்த டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகிய அவதார் இரண்டாவது பாகம் இதுவரை வசூலில் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது அந்த வகையில் உலகம் முழுவதும் இதுவரை 600 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாக தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் அவதார் இரண்டாவது பாகம் விரைவில் ஆயிரம் மில்லியன் டாலர் வசூலை பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் அவதார் இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக இருப்பதாகவும் இதனை திரையரங்கில் பார்த்தால் தான் அந்த ஃபீலிங் இருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இனி இரண்டு நாட்கள் விடுமுறை நாள் என்பதால் அவதார் வசூல் இன்னும் அதிகரிக்க கூடும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment