அருள்நிதியின் “D block” திரைப்படம் – 2 நாள் முடிவில் பந்தாடிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

0
d block
d block

நடிகர் அருள்நிதி தனது சினிமா பயணத்தை ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் வித்தியாசமான மற்றும் திருளர் படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் டிமான்டி காலனி திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டி ப்ளாக்.

இந்த படத்தை youtube புகழ்பெற்ற எரும சாணி விஜய்குமார் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை திரில்லர் மற்றும் காமெடி கலந்த திரைப்படமாக எடுத்துள்ளார் இந்த படத்தில் அருள் நிதியுடன் இணைந்து இயக்குனர் விஜய், கரும்பழனியப்பன், மிஸ்ரா மற்றும் பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து அசத்தி உள்ளனர்.

குறிப்பாக அருள்நிதி இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவரும் வகையில் எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டி ப்ளாக் படத்தை தொடர்ந்து அதே நாளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் ராக்கெட்ரி, யானை ஆகிய படங்கள் வெளியாகியிருந்தாலும்..

டி ப்ளாக் படத்திற்கு தற்பொழுது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகி உள்ளது இதுவரை மட்டுமே இரண்டு கோடி கிட்டத்தட்ட வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

முதல் நாளை விட இரண்டாவது நாளில் நல்ல வசூலை அள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டி ப்ளாக் திரைப்படத்திற்கான வரவேற்பு சற்று அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் வருகின்ற நாட்களில் படம் நல்ல வசூலை அள்ளும் என கூறப்படுகிறது.