அஜித்தின் “வலிமை” திரைப்படம் உலக அளவில் இதுவரை அள்ளிவுள்ள தொகை எவ்வளவு தெரியுமா.? 200 கோடியை தொட இன்னும் இவ்வளவுதான் தேவை.

0
valimai-
valimai-

அஜித்தின் வலிமை திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உலக அளவில் கோலாகலமாக வெளியாகியது. படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஆக்சன் சென்டிமெண்ட் திரில்லர் என அனைத்தும் இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் கொண்டாட வைத்துள்ளது.

அதன்காரணமாக தற்போது வசூல் வேட்டையை தாறுமாறாக நடந்து வருகிறது. ஒரு  பக்கம் வலிமை படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் நடிகர் அஜித்குமார் இந்த ஆண்டே ஒரு சிறப்பான படத்தை கொடுக்க மீண்டும் ஹச். வினோத்துடன் இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்காக நடிகர் அஜித் குமார் அதிரடியாக உடல் எடையைக் குறைத்து இருக்கிறார் அதன் புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலாகி வருகிறது. இது இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் படத்தைப் பார்த்த மக்கள் பலரும் வலிமை திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றன. நாளுக்குநாள் வலிமை படம் வசூலை அள்ளி வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் கிடைத்துள்ளது அதாவது வலிமை திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி பார்க்கையில் வலிமை திரைப்படம் தற்போதுவரை 197 கோடி அல்லி உள்ளதாகவும் தமிழகத்தில் மட்டுமே சுமார் 136 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது விரைவிலேயே 200 கோடி வசூல் செய்து அந்த கிளப்பில் இணையும்  என கூறப்படுகிறது.