ஒரு காலகட்டத்தில் ஆஹா ஓஹோ என இருந்த மீரா ஜாஷ்மின், பூமிகா, ரீமா சென், இப்பொழுது எப்படி இருக்கிறார்கள் என்று தெரியுமா.?

தமிழ் சினிமாவில் 90s காலகட்டத்தில் உள்ள நடிகைகள் பொதுவாகவே அழகாதான் இருப்பார்கள் அதன்பிறகு வயது ஆக ஆக அவர்களுடைய அழகும் குறைந்து விடும். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகைகள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த வகையில் 90s அக்காலகட்டத்தில் நடித்த நடிகைகள் தற்போது என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

மீரா ஜாஸ்மின் கேரளாவை சேர்ந்த இவர் ரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவருடைய முதல் திரைப்படமே மிகப்பெரிய ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர்பின்னர் கேரளாவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான பிறகு  இவர் சினிமாவில் நடிக்கவில்லை. இதன் இடைப்பட்ட காலத்தில் உடல் எடையை அதிகரித்த மீரா ஜாஸ்மின் தற்போது திரும்பவும் பழைய நிலைமைக்கு வந்து விட்டார்.

meera jasmine
meera jasmine

பூமிகா சாவ்லா இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் 90s காலகட்டத்தில் ஸ்ரீகாந்துடன் நடித்த ரோஜா கூட்டம் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன்பிறகு தமிழ் சினிமாவை விட்டு பாலிவுட்டில் சென்ற இவர் அங்கு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றி எடுக்கப்பட்ட தோனி திரைப்படத்தில் இவர் தோனிக்கு அக்காவாக நடித்திருப்பார். இதுவரைக்கும் இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

bhoomika chawla
bhoomika chawla

ரீமா சென் இவர் முதன்முதலாக அறிமுகமானது  மின்னலே திரைப்படம் இப்பவும் பல இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக இருந்துவருகிறது. மின்னலே படத்திற்கு பிறகு தூள் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலமாக மறுபடியும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார்.  இந்த படத்தில் இவருடைய நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது தற்போது இவர்  சினிமாவில் நடிக்காமல் தன்னுடைய குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டு வருகிறார்.

reema sen
reema sen

தாமிரபரணி பானு மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் பானு. ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இவருடைய உண்மையான பெயர் முக்தா இவர் கிளாசிக்கல் டான்சரும் கூட. இவர் கேரளாவை சேர்ந்த ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக இருந்து வருகிறார்.

thamirabarani banu
thamirabarani banu

90s காலகட்டத்தில் விஜய்க்கு ஜோடியாக அதிக திரைப்படத்தில் நடித்தவர்தான் கௌசல்யா இவருடைய உண்மையான பெயர் நந்தினி இவர் தற்போது சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

kausalya
kausalya

லைலா உள்ளம் கேட்குதே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பிறகு தல அஜித் கூட நடித்த திரைப்படம் தீனா இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு விக்ரமுக்கு ஜோடியாக தில், போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார். இவர் தற்போது தனது குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார்.

laila
laila
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment