துனிவு படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா.! இதோ லிஸ்ட்

0
dhunivu
dhunivu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது இந்நிலையில் இந்த படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ்சாக இருப்பதாக பட குழுவினர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் துணிவு திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்களிடம் பெற்றிருப்பதாக பல குழுவினர்கள் கூறியுள்ளார்கள்.

அதில் முதல் பாடல் சில்லா சில்லா என்ற பாடலை அனிருத் பாடி உள்ளார் என்றும் இது செம குத்துப்பாட்டாக இருக்கும் எனவும் இந்த பாடலை வைசாக்கு இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அடுத்த பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடலை ஹிப் ஹாப் தமிழா பாடியுள்ளார்.

மேலும் மூன்றாவது பாடலை ப்ரோமோஷன் பாடல் என்பதும் கேங்ஸ்டர் என்று தொடங்கும் இந்த பாடல் படம் ரிலீஸ் இருக்கும் முன்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இந்த மூன்று பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சுவாரியார் நடித்துள்ளார்.

மேலும் இவர்களை தொடர்ந்து விரா, ஜான் கொகைன உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தினை எச்.வினோத் இயக்க போனிக் கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்நிலையில் வருகின்ற பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.