மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து “எஸ் ஜே சூர்யா” நடித்து வரும் திரைப்படங்கள் மட்டும் இத்தனையா.? பொறாமையில் மற்ற நடிகர்கள்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்து டாப் நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ஆரம்பத்திலேயே அசத்தினார் எஸ். ஜே. சூர்யா. அந்த வகையில் டாப் நடிகரான அஜீத்தை வைத்து வாலி, விஜயை வைத்து குஷி  போன்ற சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி தனது திறமையை வெளிக்காட்டினார். இப்படி ஓடி கொண்டிருந்த இவர் திடீரென தனது ரூட்டை மாற்றிய எஸ். ஜே. சூர்யா நியூ, வியாபாரி, இசை போன்ற படங்களில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ஆரம்பத்தில் வெற்றியை கொடுத்தாலும் போகப்போக அவரது படங்கள் தோல்வியை சந்தித்தன. இதை உணர்ந்துகொண்ட எஸ் ஜே சூர்யா தனது நடிப்பு திறமையை மென்மேலும் மெருகேற்றி ஒரு கட்டத்தில் நல்ல கதையை தேர்ந்தெடுக்க நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்திலும் தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி அந்த படத்திற்கு உயிரூட்டினார்.

இத்தனை தொடர்ந்து பேசிய எஸ். ஜே. சூர்யாவின் மார்க்கெட்டும் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் அதிகரித்து அதிலும் குறிப்பாக தமிழில் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது வில்லனாகவும், ஹீரோவாகவும் நடிக்கிறார்.ஆனால் எஸ். ஜே. சூர்யாவை மக்கள் வில்லனாக பார்க்கவே ஆசைப் படுவது போன்ற கதைகளை தற்போது பெரிதும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் சில தினங்களுக்கு முன்பு கூட சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் சூர்யா தனது அபார வெளிப்படுத்தி அசத்தி உள்ளார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவரது கையில் பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன அந்த வகையில் பொம்மை, கடமையை செய், டான் போன்ற படங்கள் மற்றும் வெப்சிரிஸ்களிலும் நடித்துள்ளார் இது இப்படி இருக்கின்ற நிலையில் இதில் குறிப்பாக டான் படத்தில் அவர் வில்லனாகவும். பொம்மை, கடமையை செய் படத்தில் ஹீரோவாகவும் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்.

இந்த படங்கள் நல்லதொரு வெற்றியை ருசிக்கும் பட்சத்தில் எஸ். ஜே. சூர்யாவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்வதோடு மட்டுமல்லாமல் தற்போது ஹீரோ, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை ஓவர்டேக் செய்யவும் முடியும் என கூறப்படுகிறது.

Leave a Comment