விஜயின் தோல்வி படங்களாக கருதப்படும் திரைப்படங்கள் தற்போது யூடியூபில் எவ்வளவு மில்லியன் ரசிகர்களை பார்க்க வைத்துள்ளது தெரியுமா.!

தமிழ் திரையுலகில் தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் இளைய தளபதி விஜய் இவரது திரைப்படங்கள் சமீபகாலமாகவே ரசிகர்களிடையே நல்ல ஹிட்டாகி விடுகிறது ஏனென்றால் இவர் தனது திரைப்படம் இப்படித்தான் இயக்க வேண்டும் என இயக்குனர்களிடம் முன்குட்டியே கூறிவிடுகிறார்.

அந்த வகையில் இவர் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனையடுத்து தனது 65வது திரைப்படம் ரசிகர்களிடையே பிளாக்பஸ்டர் ஹிட் ஆக வேண்டும் என்பதற்காக தளபதி விஜய் நெல்சன் உடன் கைகோர்த்துள்ளார் விஜய்  தனது 65வது திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியா நாட்டில் முடித்து விட்டார் மேலும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.

தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்கள் தோல்வியடைந்தாலும் தற்போது நிறைய ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.அந்த வகையில் விஜய்யின் பிளாப் படங்களாக கருதப்படும் சுறா மற்றும் வசீகரா ஆகிய இரண்டு திரைப்படங்களையும் இந்தியில் டப் செய்து யூடியூபில் வெளியிட்டுள்ளார்கள்.

அது தற்பொழுது 40 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்துள்ளது இதனை வைத்து பார்த்த ரசிகர்கள் பலரும் தளபதி விஜயின் தோல்வி அடைந்த படம் கூட ஒரு சில நேரத்தில் ஹிட்டாகிவிடும் பார்த்தீர்களா என கூறி வருகிறார்கள்.

Leave a Comment