மிஸ்கின் உதவி இயக்குனராக இருக்கும் பொழுது எத்தனை படத்தில் நடித்துள்ளார் தெரியுமா.?

தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் மிஸ்கின் இவர் இயக்குனராக மட்டும் தனது சினிமா பயணத்தை மேற் கொள்ளாமல் நடிகராகவும் தற்போது மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வின்சென்ட் செல்வா விடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

அதன் பின் இயக்குனர் அவதாரம் எடுத்து சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ,யுத்தம் செய், முகமூடி போன்ற பல மாபெரும் ஹிட் படங்களை இயக்கிய தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துக் கொண்டார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்து கொண்டே பல படங்களில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு வந்தார் என்பது நாம் அறிந்ததே அந்த வகையில் இவர் செல்வா இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த யூத் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மிஸ்கின் தோற்றம் அளித்து இருந்தார் அந்த கதாபாத்திரத்தில் அவர் மொட்டை அடித்து இருப்பது நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் 2002 ஆம் ஆண்டு காதல் வைரஸ் மற்றும் 2005 ஆம் ஆண்டு சித்தன் போன்ற படங்களின் தொடர் முடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அதுமட்டுமில்லமால் தற்போது சுட்டு பிடிக்க உத்தரவு என்ற திரைப்படத்திலும் அவர் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இது போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் தற்போது மிஸ்கின் அவர்கள் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார் அந்த வகையிலேயே அவர் தற்போது இயக்குனர், சித்ராவிடம் வில்லன் போன்ற பல கேரக்டர்களில் தன்னை தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டு வருகிறார்.துப்பறிவாளன் 2 படத்தை விஷாலை வைத்து இயக்கிய கொண்டு இருந்த நிலையில் திடீரென சில பிரச்சனைகள் காரணமாக இப்படத்தில் இருந்து விலகினார் இதனையடுத்து இப்படத்தை விஷால் தற்போது இயக்கி வருகிறார்.

mysskin

தற்பொழுது மிஸ்கின் அவர்கள் ஆர்கே சுரேஷ் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளிவருகின்றன அதுமட்டுமில்லாமல் அஞ்சாதே 2 போன்ற படத்திலும் தற்போது இயக்க உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளன இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

msyykin

Leave a Comment

Exit mobile version