பட விஷயத்தில் ஜிவி பிரகாஷ் ஓவர்டேக் செய்யும் அவரது தங்கை தற்போது எத்தனை திரைப்படத்தில் நடிக்கிறார் தெரியுமா.?

0

தமிழ் சினிமா துறையில் எதோ ஒரு  முலையில் பயணித்தவர்கள் கூட சினிமாவில் ஹீரோவாகவும் ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்து உள்ளனர். அந்த வகையில் ஜிவி பிரகாஷின் தங்கை இசையில் ஆர்வம் கொண்டிருந்த இவர் அதன்பிறகு தற்போது சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க கவனம் செலுத்தினார்.

அந்தவகையில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்து வெளியாகிய திரைப்படம் க.பெ ரணசிங்கம் இந்தப் படத்தில் விஜய்சேதுபதியின் தங்கையாக நடித்து தனது திரையுலக பயணத்தை மேற்கொண்டவர் பவானி இவர் ஜிவி பிரகாஷின் தங்கை ஆவார்.

இதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற திரைப்படத்தில் முழுநேர கதாநாயகியாக நடிக்கிறார். இது அவருக்கு நல்லதொரு வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது ஏனென்றால் இதற்கு முன்பாக க.பெ ரணசிங்கம் படத்தில்  சின்ன ரோலில் நடித்து இருந்தாலும்  அதில் நேர்த்தியாக நடித்து  மக்களின் பாராட்டைப் பெற்றார்.

அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தாறுமாறாக எகிறி உள்ளது. ஒரு பக்கம் இருக்க வெற்றிமாறன் சூரியனையும் விடுதலை திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப்படத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளதால் படத்திற்கானபடம் வேற லெவல் ரீச் அடைய உள்ளது இதனால் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த படம் வெற்றி அடைந்துவிட்டால் தமிழ் சினிமாவில் யாரும் எட்டாத இடத்தை இவர் வெகு விரைவிலேயே பிடிப்பார் எனவும் கூறப்படுகிறது.