வளர்ந்து வரும் ஹீரோ நடிகர் விஷ்ணு விஷால் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா.? வெளியே வந்த சூப்பர் தகவல்.

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகளை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷல். இவர் 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.

முதல் படமே நடிகர் விஷ்ணு விஷாலுக்கு சூப்பர் ஹிட் அடித்த காரணத்தினால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவி வண்ணமே இருந்தன. இருப்பினும் விஷ்ணுவிஷால் சிறப்பான கதைகள் வரும் வரை பொறுமை காத்து பின் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றியைக் கண்டார். அந்த வகையில் குள்ளனரி கூட்டம், ஜீவா, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்கள் இவருக்குப் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தன.

அதனை தொடர்ந்து தற்போது விஷ்ணுவிஷால் பல்வேறு பட வாய்ப்புகளையும் தன்வசப்படுத்தி இருக்கிறார் அந்த வகையில் மோகன்தாஸ், எப்ஐஆர், ஜகஜால கில்லாடி போன்ற பல்வேறு படங்களை வைத்திருக்கிறார் அதில் முதலாவதாக எப்ஐஆர் திரைப்படம் வெளி வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும்  விஷ்ணு விஷால் நிஜ வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்தித்து உள்ளார். ஆம் முதலில் ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இருப்பினும் ஒரு கட்டத்தில் இருவருக்கும்  இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு விளையாட்டு வீராங்கனையான ஜுவாலா கட்டா என்பவரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை விஷ்ணு விஷாலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது அதன்படி பார்க்கையில் விஷ்ணு விஷாலின் சொத்து மதிப்பு சுமார் 60 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.

Leave a Comment