லைகர் படத்தில் நடித்ததற்காக “மைக் டைசன்” வாங்கிய சம்பளம் – எத்தனை கோடி தெரியுமா.? அதிர்ச்சியில் தென்னிந்திய சினிமா.

சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள் இதனால் அந்த ஹீரோவின் படம் சுமாராக இருந்தாலும் கூட ரசிகர்கள் பார்த்து அந்த படத்தை வெற்றி படமாக மாற்றி விடுவார்கள் ஆனால் அண்மைக்காலமாக நடப்பது அதற்கு எதிர் மாறாக இருக்கிறது.

கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருந்தாலும் அந்த ஹீரோக்களின் படங்கள் தோல்வியை தழுவுகின்றன. அந்த வகையில் ஹிந்தியில் அண்மைக்காலமாக அமீர்கான், அக்ஷய்குமார் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர் கொண்டா இவர் டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து..

தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார் இவர் பூரி ஜெகநாதனுடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் தான் லைக்கர் இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டா முழுக்க முழுக்க ஒரு குத்துச்சண்டை வீரராக நடித்தார். இந்த படமும் குத்துச்சண்டையை மையமாக வைத்துதான் உருவாகி இருந்தது இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் பூரி ஜெகன்நாத் மற்றும் பலர் இணைந்து இந்த படத்தை தயாரித்தனர்.

இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டா உடன் கைகோர்த்து அனன்யா பாண்டே, மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன், ronit roy, அலி விஷ்ணு, ரெட்டி ஹனி, யாதவ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த வாரம் 25ஆம் தேதி அதிக திரையரங்குகளில் வெளியானது விஜய் தேவர் கொண்டா ரசிகர்களே இந்த படத்தை பெரிய அளவில் பார்த்து படத்தை வெற்றி படமாக மாற்றி விடுவார்கள் என நினைத்தனர்.

ஆனால் அவரது ரசிகர்களுக்கே இந்த படம் பிடிக்கவில்லையாம் இதனால் மோசமான விமர்சனத்தை பெற்று இந்த படம் தோல்வியை தழுவியுள்ளது தற்பொழுது இந்த படத்தை திரையரங்கில் வெளியிடவே யோசிக்கின்றனராம் திரையரங்க உரிமையாளர்கள் ஏனென்றால் பெரிய அளவு கூட்டம் வரவில்லை என கூறப்படுகிறது. இந்த படம் தோல்வியை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்  ஒரு முக்கிய கேமியோ ரோலில் நடித்துவிட்டு போயிருப்பார். அதற்காக அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். அதன்படி பார்கையில் இந்த படத்திற்காக சுமார் 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment