வசூல் வேட்டையாடும் கார்த்தியின் விருமன் – இதுவரை மட்டும் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.? அண்ணாந்து பார்க்கும் ரசிகர்கள்.

நடிகர் கார்த்தி நடிப்பில் சென்ற வருடம் சுல்தான் என்னும் திரைப்படம் வெளியாகியது இந்த படம் விவசாயத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருந்தது ஆனால் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்று வந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்து கார்த்தி பொன்னியின் செல்வன், சுல்தான், விருமன் ஆகிய மூன்று படங்களில் நடித்து வந்தார்.

இந்த மூன்று படங்களில் முதலாவதாக விருமன் திரைப்படம் அண்மையில் வெளியாகி திரையரங்கில் வெற்றி நடை கண்டு வருகிறது. இந்த படத்தை கார்த்தியின் கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விருமன் படத்தில் கார்த்தியுடன் இணைந்து அதிதி சங்கர் முதல் முதலாக ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அதிதி சங்கரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது மற்றும் இந்த படத்தின் பாடல்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளன.

படம் அப்பா சென்டிமென்ட், காதல், காமெடி போன்ற அனைத்தும் இடம்பெற்றுள்ளது இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி போன்ற பல நடிகர் நடிகைகளும் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் வெளியாகி ஒவ்வொரு நாளும் நல்ல வசூல் வேட்டை கண்டு வருகின்ற நிலையில் அண்மையில் படத்தின் வெற்றி விழா கூட நடைபெற்றது அதில் படக்குழு அனைவரும் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

இந்த நிலையில் படம் வெளியாகி இதுவரை உலகம் முழுவதும் 63 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. போட்ட பட்ஜெட்டை தாண்டி அதிகளவு வசூலை ஈட்டி உள்ளதால் பட குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றன. விருமன் படத்தை நடிகர் கார்த்தியின் அண்ணன் சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment