விஜய் ஆண்டனியின் “கோடியில் ஒருவன்” படத்தின் 10 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா.? அதிர்ச்சியான மற்ற நடிகர்கள்.

சினிமாவுலகில் ஹீரோ மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர்கள் அடியெடுத்து வைத்து அசத்தினாலும் ஒரு கட்டத்தில் பலரும் சினிமாவில் பல்வேறு துறைகளில் ஈடுபடுத்திகொண்டு பன்முகத்தன்மை கொண்டவர்களாக மாறி வளர்த்துக் கொண்டு படிப்படியாக சினிமா உலகில் வெற்றி கண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது படங்களை தயாரிப்பது மற்றும் நடித்தும் வெற்றி கண்டு வருகிறார் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில்  ஆரம்பத்தில் வெளியான ஒவ்வொரு திரைப்படமும் சூப்பர் டுப்பர் ஹிட் தான் மேலும் அவரது படங்கள் எல்லாம் மக்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது மேலும் அதில் விஜய் ஆண்டனி நடிப்பு அபாரம்.

அந்தவகையில் நான், சலீம், பிச்சைக்காரன், எமன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் கடைசியாக அவர் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை பெறவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் ஆண்டனி சமீபத்தில் ஆனந்த கிருஷ்ணன் என்பவருடன் இணைந்து கோடியில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா எடுத்திருந்தார். டிரெய்லரே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் வெளியானால் நல்ல வரவேற்பு ஆரம்பத்திலிருந்தே கிடைத்தது. கடந்த 17ம் தேதி கோடியில் ஒருவன் திரைப்படம் ரிலீஸ் ஆனது கடந்த முதல் வாரத்திலேயே நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிய நிலையில் இதுவரை சுமார் 10.2 கோடி வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது கோடியில் ஒருவன். கொரோனா தொற்று காரணமாக திரையரங்கில் 50% இக்கையுடன் படம் வெளியானாலும் நல்லதொரு வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று இப்பொழுதும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Leave a Comment

Exit mobile version